வியாழன், 30 ஏப்ரல், 2009

கோபம் என்றால் என்ன?

கோபம்'

கோபம்' என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சியாகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறிகொண்டதாக இருக்கலாம்.


கோபம் ஏற்படும்போது உடலளவில் அதிக இரத்த அழுத்தம் வேகமான இதயத்துடிப்பு, அட்ரீனாலின்(adrenaline)நோராட்ரீனலின்(noradrenaline)அதிகம் சுரக்கலாம்.


வேண்டாமே கோபம் !


கோபம் எதனால் வருகிறது? கோபம் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? நாம் கோபப்படுவதைப்போல் பிறர் நம்மிடம் கோபம் கொண்டால் விளைவுகள் என்ன? ஒரு மனிதன் சிறிதளவு கால அவகாசம் ஒதுக்கி தனிமையில் மேற்கண்ட கோபம் குறித்த கேள்விகளுக்கு விடைகளை சிந்தித் துப் பார்த்தால், தான் கோபம் கொள்ளநேரிடும் அனேக சூழ்நிலை களைத் தவிர்க்கலாம். தனக்குத் தானே கட்டளையிடும் `ஆட்டோ சஜசன்’ என்ற முறையில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில்“நான் ஒருபோதும் எவரிடத்தும் கோபம் கொள்ளமாட்டேன்.மனமே எதை நினைத்தும் கோபம் கொள்ளாதே” என்று சங்கல்பத்தை குறைந்தது 10 தடவை தன் மனதிற்குள் சொல்ல வேண்டும்.ஓரிரு மாதங்கள் கழித்து தனது கோபப் படும் குணத்தை ஆராய்ந்து பார்த்தால் கண்டிப்பாக கோபம் கொள்ளும் தன்மை குறைந்து வரும். கணவன் மனைவியிடையே ஒருபோதும் எந்த ஒரு செயல் நிமித்தமும் கோபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு, கனிவான முறையில் பேசிப்பழகிட வேண்டும். கோபம் கொள்ளும் செயல் என்று ஒருசெயலை அல்லது ஒரு நிகழ்வினைக் கூட சுட்டிக் காட்டுதல் கூடாது.கோபம் கொள்ளும் தன்மை எவர் ஒருவரி டம் அறவே இல்லையோ, அவரை குடும்ப மும், சுற்றத்தாரும் ஏன்? இந்த சமுதாயமே இனிய மனிதராக ஏற்றுக் கொள்ளும். அதன் மூலமே நாம் பல்வகையான பயன் களை அடைந்து வாழ்வில் ஏற்றம் பல பெறலாம்.

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. முதல் பதிவாக இருந்தாலும் உபயோகமான பதிவாக உள்ளது.தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு