அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...
,,, சொர்க்கம் செல்ல இலகுவான வழிகளில் ஒன்று எப்போது ஒலுச் செய்தாலும் இரண்டு ரகாத்துகள் தொழுவதாகும். இந்த பழக்கத்தை கடைபிடித்தால் சொர்க்கம் செல்லும் வழி நமக்கு இலகுவாகும் என்பதைப் பின்வரும் நபிமொழி நமக்குத் தெளிவாக விளக்குகிறது.
ஒரு முஸ்லீம் அழகிய முறையில் உளுச் செய்து அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தித் தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை. என்று நபிகள் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் - உக்பா பின் ஆமிர் (ரலி) நூல் (முஸ்லீம் 397 )
இதே பழகத்தை இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து கடைபிடித்து வந்த பிலால் (ரலி) அவர்கள் சொர்கத்துக்குறியவர் என்று இவ்வுலகத்துலேயே நபிகளார் சுபச் செய்தி கூறியுள்ளார்கள்.
ஒரு பஜ்ருத் தொழுகையின் போது பிலால் ( ரலி) யிடம், பிலாலே! இஸ்லாத்தில் இனைந்தபின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறுவிராக. ஏனெனில் உமது செருப்போசையை சொர்கத்தில் நான் கேட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு பிலால் (ரலி), இரவிலோ பகலிலோ நான் உளுச்செய்தால் அவ்வுளுவின் மூலம் நான் தொழ வேண்டும்மென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் எனது செயல்களில் சிறந்த செயல். என்று விடையளித்தார்கள். அறிவிப்பாளர் அபுஹுரைரா (ரலி) நூல் (புஹாரி 1149)
மேலும் இறைவனை வணங்குவதற்காக ஒருவர் ஒளுச் செய்யும் போது அவர் உறுப்புகள் செய்த பாவங்களும் மன்னிக்கப் படுகின்றன.
ஒரு முஸ்லீமான அல்லது முஃமினான அடியார் உளுச் செய்யும் போது முகத்தைக் கழுவினால், கண்கலால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் ( முகத்தைக் கழுவிய ) நீருடன் அல்லது நீரின் கடைசித்துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்த பாவங்கள் அனைத்தும் ( கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித்துளியுடன் வெளியேருகின்றன.அவர் கால்களைக் கழுவும்போது கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய ) நீறோடு அல்லது நீரின் கடைசித்துளியோடு வெளியேறுகின்றன.இறுதியில் அவர் பாவங்களில்லிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் அபுஹூரைரா (ரலி) நூல்(முஸ்லீம் 412)
ஒரு மனிதன் ஒவ்வொரு உளுவின் போதும் தொழுகையைக் கடைபிடித்து வந்தால் அவரிடம நற்செயல்கள் குடிகொள்வதுடன் தீய செயல்களும் அவறைவிட்டு அகன்றுவிடும். இது தொழுகையைப் பின்பற்றுவதால் ஏற்படும் கிடைக்கும் நன்மை என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
தொழுகையை நிலைநாட்டுவிராக !. தொழுகை வெட்கக் கேடான காரியங்களைவிட்டும் தீமையைவிட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29.45)
ஒவ்வொரு ஒளுவின்போது இரண்டு ரகாத் தொழுவது கடுமையான காரியம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் முயற்ச்சி செய்தால் சாதாரணமாக செய்து விடலாம்.
இதை அற்பமான காரியமாக நினைத்து விட்டுவிடாமல் ஒவ்வொரு உளுவின்போதும் குறைந்த பட்ச்சம் இரண்டு ரகாத்துகளாவது தொழும் பழகத்தை தொடர்ந்து கடைப்பிடித்து சொர்கத்துக்கு செல்லும் வழிகளை இலகுவாக்குவோம். இன்ஷாஅல்லாஹ்.
நன்றி: தீன்குலப்பெண்மணி மாத இதழ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக